16 Decemeber 2024

நடிகை  ரித்திகா சிங் சினிமா பயணம்

Pic credit-Instagram

Author Name : Barath Murugan

நடிகை ரித்திகா சிங் 1994ம் ஆண்டு  டிசம்பர் 16ம் தேதியில் மும்பையில் சாதாரண குடும்பத்தில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் தனது பள்ளிப் படிப்பிற்குப் பின் ரித்திகா கிக் பாக்ஸிங் மற்றும் கலப்பு தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார்.

படிப்பு

2009ம் ஆண்டில் நடந்த ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதித்துவமாக "சூப்பர் ஃபைட் லீக்" என்ற போட்டியில் பங்கேற்று  வெற்றி பெற்றுள்ளார்.

கிக் பாக்ஸிங்

 நடிகை ரித்திகா 2016ம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான "இறுதிச்  சுற்று" திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பின் நடிகையாக  அறிமுகமானார்.

முதல் திரைப்படம்

இவர் 2020 ஆண்டில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். 

ஓ மை கடவுளே

இவர் 2017ம் ஆண்டு இறுதிச் சுற்று திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான குரு என்ற படத்தில் நாயகியாக நடித்து டோலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகினார்.

தெலுங்கு அறிமுகம்

இவர் இந்தியில் இயக்குநர் ஹாரிஸ் வார்டன் இயக்கத்தில் "இன்கார்" என்ற திரைப்படத்தில் அதிகம் பயணம் செய்யும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகினார்.

இந்தி அறிமுகம்

இவர் இயக்குநர் ஞானவேல் இயக்கத்திலும் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பிலும் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் போலீஸ்  அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து  அசத்தியிருப்பார்.

வேட்டையன்

நடிகை ரித்திகா சிங் தனது 30-வது வயது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். பலரும் பிறந்தநாள்  வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்

30வது பிறந்த நாள்