நடிகை ரித்விகாவின் பிறந்த நாள் இன்று!

05 AUGUST 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

சேலம் மாவட்டத்தில் 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பிறந்தார் நடிகை ரித்விகா.

பிறப்பு

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ‘பரதேசி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ரித்விகா.

அறிமுகம்

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் வடசென்னை பெண்ணாக நடிப்பில் அசத்தியிருப்பார். 

மெட்ராஸ்

மெட்ராஸ் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது கிடைத்தது.

விருது

 ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ‘கபாலி’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

கபாலி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்டு 106 நாட்களைக் கடந்து வெற்றிக் கோப்பையை கைப்பற்றினார் நடிகை ரித்விகா.

பிக்பாஸ் 

பிக்பாஸில் வெற்றி அடைந்த பிறகு தமிழ் சினிமாவில் ரித்விகா கொடிகட்டிப் பறப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவ்வப்போது சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

படங்கள்