23 October 2024
Pic credit - Instagarm
Barath Murugan
நடிகை ஷ்ரேயா சரண் 1981ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இந்தியாவில் உள்ள தேராதூன் என்ற இடத்தில் பிறந்துள்ளார்.
இவர் டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்துறையில் படித்து பட்டம் பெற்றவர்.
இவர் 2001ல் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான "இஷ்டம்" என்ற தெலுங்கு படத்தின் மூலம் முதன்முறையாகத் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
இவர் பிரபல நடிகை மட்டும் இல்லை கதகளி மற்றும் பிரபல ராஜஸ்தானி நடனக் கலைஞரும் ஆவார்.
இவர் 2003ல் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக மழை, சிவாஜி திருவிளையாடல் ஆரம்பம், குட்டி மற்றும் அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்கள் அமைந்தது.
இவர் 2018ல் பிரபல ரஷ்ய தொழிலதிபரான ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.