23 OCT 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்று அமேசான் பிரைம்.
இந்த ஓடிடி தளத்தில் திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் என பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதால் இதற்கு பயனர்கள் ஏராளம்.
இந்த நிலையில், இனி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் என்று அமேசான் பிரைம் கூறியுள்ளது.
வரும் 2025 ஆம் ஆண்டு முதல் அழுத்தமான கன்டென்டுகளில் முதலீடுகளை தொடரவும், அவற்றை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று அமேசான் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தாங்கள் காணும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களுக்கு இடையில் விளம்பரங்கள் இடம்பெறும்.
இந்த நிலையில் மற்ற ஸ்ட்ரீமிங் தளங்களை விடவும் குறைவான விளம்பரங்களை இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அமேசான் கூறியுள்ளது.
மேலும் விளம்பரம் வேண்டாம் என்று நினைப்பபர்களுக்கு "Ad Free" கட்டணம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம் என்று அமேசான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.