இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் சிறுவயது போட்டோ

08 August 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்த ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அறிமுகம்

 தனது திறமையால் குறுகிய காலத்தில் உயரத்திற்கு சென்ற நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

முன்னணி நடிகை

தொடர்ந்து அழுத்தமான கதைக்களங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 

முன்னணி நடிகர்கள்

மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

காக்கா முட்டை

 ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தப் படம் ‘கனா’. விவசாயத்தையும், பெண்கள் கிரிக்கெட்டையும் பேசிய இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமிக்க நாயகியாக திகழ்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கனா

தொடர்ந்து நாயகிகளை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. 

நாயகிகள் கதை

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குழந்தை ஐஸ்வர்யா ராஜேஷ்