2007 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
2014 ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.
விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா படத்தில் இவர்களுக்கு மகளாக அனிகா நடித்த பிறகு ரசிகர்கள் இவரை குட்டி நயன் என்று செல்லமாக அழைக்க தொடங்கினர்.
தமிழ் ரசிகர்கள் பலர் நடிகை அனிகாதன் அஜித்தின் மகள் என்று நம்பும் அளவிற்கு அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு 18 வயது ஆனதை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
சமீபத்தில் அளித்த பேட்டியில், "PT சார் படத்தில் நான் நடிக்க முக்கியமான காரணம் பெண்களுக்கு நடக்கும் கொடுமைதான் என்று கூறியுள்ளார்.
பேருந்துகளில் பெண்களை தவறாக தொடுவார்கள், டார்ச்சர் செய்வார்கள் என கேள்வி பட்டுள்ளேன். எனக்கு அது போல் நடந்தது கிடையாது.
இதுபற்றிய ஒரு விழிப்புணர்வு வர வேண்டும் என்பதாலேயே இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அனிகா தெரிவித்துள்ளார்.