06 November 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருச்சூரில் பிறந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. இவருடைய தந்தை கே.பி பாலமுரளி ஒரு இசையமைப்பாளர் ஆவார்.
தனது 20 வயதில் மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் 'மஹேஷின்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2017-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் அபர்ணா பாலமுரளி.
அதனைத் தொடர்ந்து சூர்யாவின் நாயகியாக ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பொம்மியாக இடம்பிடித்தார்.
அபர்ணா பாலமுரளி சமீபத்தில் நடிகர் தனுஷின் இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார்.
ராயன் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற அபர்ணா பாலமுரளிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகை அபர்ணா பலமுரளியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.