தலையை அசைத்தாலே Call Attend ஆகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4

11 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

இட்ஸ் க்ளோடைம்

 ஆப்பிள் நிறுவனத்தின் "இட்ஸ் க்ளோடைம்" நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச் 10 சீரீஸ் மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 சீரீஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 

ஏர்பாட் 4

இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 சீரீஸ் பல புதிய நவீன அம்சங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவு பல புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 

தலை அசைவு

இந்த ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 சீரீஸில் தலை அசைப்பதின் மூலம் போன் கால்களை அட்டன் செய்யும் புதிய அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

Type C

இந்த ஏர்பாடில் Type-C சார்ஜிங் வசதி, மேம்படுத்தப்பட்ட ஒலியமைப்பு, 30 மணி நேர பேட்டரி திறன், எளிதாக அணியக்கூடிய வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

2 வேரியண்ட்ஸ்

இந்த ஏர்பாட்ஸ் 2 வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. 

விலை

அதன்படி, Standard Airpods 4 ரூ.12,900-க்கும், Airpods 4 ANC ரூ.17,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை

 ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அட்டகாசமான ஏர்பாட் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க