அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஆப்பிள் வாட்ச் 10 சீரீஸ்!

10 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஆப்பிள் வாட்ச்

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் சீரீஸ் 16, ஆப்பிள் வாட்ஸ் சீரீஸ் 10 மற்றும் ஆப்பிள் ஏர்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 

சீரீஸ் 10 

மக்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆப்பிள் வாட்ஸ் சீரீஸ் 10 அறிமுக செய்யப்பட்ட நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே

அதன்படி ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 10 பெரிய OLED டிஸ்பிளே மற்றும் மெல்லிய பெசில்ஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 45mm மற்றும் 49mm ஆகிய தேர்வுகளில் வருகிறது. 

வாட்டர் ரெசிஸ்டன்ஸ்

இந்த வாட்சின் பின்புறத்தில் பிளாக் மெட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. இது நீடித்து உழைக்கும் தன்மையுடன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது.

டைட்டானியம்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு பதிலாக இதில் டைட்டானியம் கொடுக்கப்பட்டுள்ளது. இது எடை குறைவாகவும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Sleep Apnea

Sleep Apnea Detection என்ற புதிய அம்சம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பயணர்களுக்கு தூங்கும் போது மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது.

விலை 

இந்த வாட்சின் GPS வெர்ஷன்  ரூ.46,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதேபோல GPS+ ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க