11 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic credit - Pinterest
தெற்காசியாவில் அமைந்துள்ள இந்த நாடு, 1989 வரை பர்மா என்று அழைக்கப்பட்டது. பின் தன் நாட்டின் பெயரை மியான்மர் என மாற்றியது.
தெற்காசியாவில் அமைந்துள்ள தீவு நாடான ஸ்ரீலங்கா 1972 வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது. பிறகு தனது நாட்டின் பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்றிக்கொண்டது.
தெற்காசியாவில் அமைந்துள்ள இந்த நாடு கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. 1971 ஆண்டு பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பங்களாதேஷ் என்று பெயர் பெற்றது.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்த நாடு முதலில் சியாம் என்று அழைக்கப்பட்டது.1939 ஆம் ஆண்டு தாய்லாந்து என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இது தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. கம்பூச்சியா என்று அழைக்கப்பட்ட இந்த நாடு, 1989 ஆம் ஆண்டுக்குப் பின் கம்போடியா என்று அழைக்கப்படுகிறது.
பெர்சியா என்று அழைக்கப்பட்ட இந்த நாடு மேற்கு ஆசியாவில் அமைந்துள்ளது. 1935 ஆம் ஆண்டு முதல் ஈரான் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்த நாடு முன்னர் டச் ஈஸ்ட் இன்டீஸ் என்று அழைக்கப்பட்டது. 1850 ஆம் ஆண்டுக்குப் பிறகு இது இந்தோனேசியா என்று அழைக்கப்படுகிறது.