21 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் அதிக அளவு சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதன் மூலம் பல பிரச்னைகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது மன ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதன் மூலம் உளவியல் பிரச்னைகள் ஏற்படும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 16 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
11 வயது முதல் 15 வயதிளான பிள்ளைகளின் மூளை மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்கும் என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.