நீங்கள் காதலிக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்!

14 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

முக்கியமான விவாதங்களை புறக்கணிக்க கூடாது. வெளிப்படையான பேச்சு, முன்னுரிமை ஆகியவை ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும்

விவாதம்

காதலிக்கும் நபர் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். கேள்வி இருந்தால் பதிலை கேளுங்கள்.சந்தேகம் வேண்டாம்

நம்பிக்கை

ஒருநாளில் குறைந்தப்பட்சம் ஒருமணி நேரமாவது ஒதுக்கி மனம் விட்டு பேசுங்கள். நிலைமையை புரிந்து நடப்பார் என நினைக்க வேண்டாம்

நேரம் செலவு

காதலிப்பவர்களை சாதாரணமாக நினைத்து வழிநடத்தக்கூடாது. அவர்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொள்ள வேண்டும்

சாதாரணம்

காதலிக்கும் நபரின் தனிப்பட்ட வளர்ச்சியை எப்போதும் பாராட்ட வேண்டும். அதைவிட்டு பொறாமை எண்ணத்தை வளர்க்கக்கூடாது

வளர்ச்சி

நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயங்களை தயவு செய்து எதிர்பார்க்காதீர்கள். இது நிச்சயம் ஏமாற்றத்தை உண்டாக்கும்

எதிர்பார்ப்பு

ஒவ்வொரு காதலுக்கு வெவ்வேறு சூழல் இருக்கும். எனவே மற்றொருவருடன் உங்கள் காதலன்/ காதலியை ஒப்பிடாதீர்கள்

ஒப்பீடு