05 OCT 2024

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Author Name : umabarkavi

Pic credit - Unsplash

பூண்டு

இந்திய உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது பூண்டு. இதில் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

பூண்டு

பூண்டில் வைட்டமின் சி, பி6, செலினியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

பூண்டு

பூண்டை தினமும் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. இது எண்ணற்ற பலன்களை தருகிறது

பூண்டு

பூண்டு இயற்கையாகவே ஒரு மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக, சளி, காய்ச்சல், இருமல் போன்ற  பிரச்னைகளுக்கு பூண்டை சேர்க்கலாம்

பூண்டு

பூண்டில் கலோரிகள் குறைவு. ஒரு பல் பூண்டில் 4.5 கலோரிகள் இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற பெரிதும் உதவுகிறது

பூண்டு

பூண்டு ரத்த அழுதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய் அபாயத்தையும் குறைக்கலாம்

பூண்டு

வாயு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு பூண்டை உணவில் தாரளமாக சேர்க்கலாம்