16 May 2024
அனைவரும் நமது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருப்பதற்கு பல பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்று தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமம் தொடர்பான பல பிரச்னைகளை நீக்க உதவுகிறது. இதை நாள்தோறும் பயன்படுத்தினால் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்
தேங்காய் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவினால் முகப்பரு, தழும்புகள், கருமையை போக்க உதவும்
குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. வரண்டு இருக்கும் சருமத்தை இது மென்மையாக மாற்ற உதவும்
இரவில் தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவினால் தோல் அழற்சி, சுருக்கங்கள் போன்றவை நீங்கும்
தேங்காய் எண்ணெய்யுடன் வைட்டமின் ஈ இருக்கும் எண்ணெய்யை சேர்த்து முகத்தில் பரப்பி மெதுவாக தினமும் மசாஜ் செய்தால் ஏராளமான வித்தியாசங்களை காணலாம்
தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெயையும் முகத்தில் தடவலாம். இதனை 2-3 நிமிடம் முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம்.