28 JULY 2024
Umabarkavi
Pic credit - Unsplash
அற்புதமான நறுமணத்தை கொடுக்கும் பிரிஞ்சி இலையை பிரியாணி, நெய் சோறு, புலாவ் போன்ற உணவு வகைகளில் சேர்ப்போம். இதில் பல மருத்துவ நன்மைகளும் உள்ளன
பிரிஞ்சி இலையில் பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி ஃபங்கல், ஆன்டி வைரல் போன்றவை நிறைந்துள்ளன
பிரிஞ்சி இலை ஜீரண சக்தியை மேம்படுத்தலாம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்ய உதவும்
பிரிஞ்சி இலை காயங்களை விரைவில் குணமாக்கும். அத்துடன் வாய்வுத் தொல்லையை குறைக்க உதவுலாம்
வெறும் வயிற்றில் இதை டீ வைத்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி, இரண்டு இலைகளை அதில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்
பிரிஞ்சி இலையின் வாசனை நுரையீரலுக்கு நல்லது. தினமும் காய்ந்த இலைகளை எரித்து அதனின் புகை நறுமணத்தை சுவாசிக்கலாம்