27 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
தினமும் 1 டீஸ்பூன் தேன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இருமல் நீங்கும். தேன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேன் சளி மற்றும் இருமலை தடுக்கவும் உதவுகிறது. தேனில் ப்ரீபயாடிக் பண்புகள் உள்ளன. தேன் சாப்பிட்டு வந்தால், குளிர்காலத்தில் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
ஒரு ஸ்பூன் தேனில் மஞ்சள் மற்றும் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
குளிர்காலத்தில் தேன் சாப்பிட்டு வந்தால் இதயம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
உணவில் தேன் சேர்த்துக் கொண்டால் வாயு மற்றும் அமிலத்தன்மை நீங்கும். மலச்சிக்கல் குறையும். காலையில் வெந்நீரில் தேன் கலந்து குடிப்பது செரிமானத்திற்கு நல்லது.