29 JULY 2024

தினமும் காய்கறி ஜூஸ் குடிப்பது நல்லதா?

Pic credit - Unsplash

Umabarkavi

காய்கறிகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காய்கறிகளை சாப்பிட வேண்டும். சிலர் காய்கறிகளை சாப்பிடுவதுடன் அதனை ஜூஸாகவும் குடிக்கின்றனர்

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ் குடிக்கும்போது சில விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்

வேக வைக்கவும்

காய்கறிகளை ஜூஸ் செய்யும்போது சிலவற்றை அப்படியே குடிக்க கூடாது. அதை பாதி வேக வைத்து ஜூஸ் செய்யலாம்

கீரைகள்

குறிப்பாக கீரையை பச்சையாக ஜூஸ் போட்டு குடிக்க கூடாது. கீரையை வேக வைத்து தான் அதை மிக்ஸியில் அரைத்து ஜூஸாக குடிக்கவும்

பழங்கள்

பழங்கள், காய்கறிகள் இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்யவே கூடாது. இரண்டிலும் உள்ள என்சைம்கள் தனித்தனி பலனை தரக் கூடியவை

செரிமான சிக்கல்

காய்கறிகளை வேகவைத்து மசித்து மிக்ஸியில் அரைத்து குடிக்க வேண்டும். இது செரிமானத்தை நன்றாக வைக்கும்

ஒவ்வாமை

உங்கள் உடலுக்கு ஏற்றவாறு காய்கறிகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம். ஒவ்வாமை இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகி குடிப்பது நல்லது