24 September 2024
Author : Umabarkavi
Pic credit - Getty
சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்துவதில் ஒன்றாக பெருஞ்சீரகம் உள்ளது. இது சாப்பிட்ட பிறகு சிலர் சாப்பிடுவது உண்டு
பெருச்சீரகத்தில் வைட்டமின் சி, ஏ பி6, இருப்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
குறிப்பாக பெருஞ்சீரக தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும்
பெருஞ்சீரக தண்ணீரை தினமும் குடித்தால் செரிமானம் மேம்படும். வாயு, அசிடிட்டி போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்
வாயு துர்நாற்றம் நீங்கும். மேலும், பற்கள், ஈறுகளுக்கு மிகவும் நன்மை பயக்க கூடியதாக உள்ளது
பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது
பெருச்சீரக தண்ணீர் முடியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும். முடி உதிர்வையும் தடுக்கும்