15 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இளநீர் குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்
உடற்பயிற்சி செய்பவர்கள் தண்ணீருக்கு பதில் இளநீர் குடிப்பது நல்லது. இது வெயில் காலத்தில் தாகத்தை தணிக்க உதவும்
இளநீரில் சர்க்கரை அளவும், கலோரியும் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகளும் இதனை தாரளமாக குடிக்கலாம்
இளநீர் பசியை கட்டுப்படுத்தும். செரிமான பிரச்னை உள்ளவர்கள் இளநீர் குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகள் வாய்வு தொல்லை நாளடைவில் குணமடையும்
இளநீர் குடிப்பதால் சருமம் ஈரப்பதமாக இருக்கும். சரும சுருக்கத்தையும் குறைக்கும்
சிறுநீரக கல் இருப்பவர்களை மருத்துவர் அதிக நீர் குடிக்க சொல்கின்றனர். எனவே இளநீர் குடிப்பதால் சிறுநீரில் உள்ள குளோரினை வெளியேற்றுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இளநீரை காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். ஆனால், அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம்.