Pic credit - Unsplash
Umabarkavi
31 JULY 2024
தினை என்பது ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் உணவு பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன
தினையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
அரிசியை காட்டிலும் இதில் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினை அரிசியில் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளன
தினையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையலாம். கெட்ட கொழுப்புகளும் நீங்கும்
தினை தோசை, கூழ், களி என வீட்டிலேயே செய்த தினமும் சாப்பிடலாம்
தினை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இதை கூழாக தினமும் காலையில் சர்க்கரை நோயாளிகள் குடித்து வரலாம்
கால்சியம் நிறைந்துள்ளதால் முதுகுவலி, மூட்டு வலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்னைகள் வராமல் தடுக்கும்