13 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Unsplash
குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவது நல்லது. இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன
முள்ளங்கியில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், பைபர் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன
முள்ளங்கியில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
முள்ளங்கியில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ளதால் உடல் எடை குறைய பெரும் பங்கு வகிக்கிறது
முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்
முள்ளங்கியில் பொட்டாசியம் உள்ளதால் இதனை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
ஒவ்வாமை போன்ற பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகி முள்ளங்கியை எடுத்து கொள்ளலாம்