21 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் நிறைந்துள்ளன.
நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதல் உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்கும். இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது
நல்லெண்ணெயில் உடல் எடை குறையவும் வாய்ப்புள்ளது. மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெயை உணவில் சேர்க்கலாம்
தினசரி இரண்டு ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடம் கொப்பளித்தால் பற்கள், ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்
நல்லெண்ணெயை சூடாக்கி அதில் கல் உப்பு கலந்து இதை வெடிப்புகளில் தடவினால் பாதம் மென்மையாக இருக்கும்
வாரம் ஒருமுறை உடம்பில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்தார் உடல் சோர்வு நீங்கும்
சமைக்கும் உணவுகளில் மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட நல்லெண்ணெய் பயன்படுத்துவது ஆரோக்கியமானது