11 May 2024
அனைத்து தரப்பு மக்களும் வாங்கி சாப்பிடும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. பண்னை கொய்ய, சிவப்பு நிற கொய்யா என பல வகைகள் உள்ளன.
எந்த வகையான கொய்யா என்றாலும் அதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ,சி, இரும்பு சத்து போன்றவை உள்ளன.
கொய்யா மட்டுமில்லாமல் அதனின் இலைகளிலும் மருத்துவ குணங்கள் நிரம்புள்ளன. இதனை அறிந்தவர்கள் கொய்யா இலைகளை சாப்பிட தவறுவதில்லை.
கொய்யா இலையில் தினமும் சாப்பிட்டால் எண்ணற்ற பலன்களை நாம் பெற முடியும். அதன்படி, ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
உடல் எடை குறையும், உடலில் உள்ள செரிமான சக்தியை மேம்படுத்தும், மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்
அசிடிட்டி, குடல் வாய்வு போன்ற பிரச்னைகளை இருப்பவர்கள் கொய்யா இலையை சாப்பிடலாம். வைட்டமின் சி இருப்பதால் சரும அழகை மேம்படுத்த உதவும்
கொய்யாய் இலையை அப்படியே சாப்பிடாமல் அதனை டீ போட்டு குடித்தால் சுவையாக இருக்கும். 7,8 கொய்யா இலைகளை, போதுமான அளவுக்கு தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்
மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் வற்றிய பிறகு, இறக்கி விடவும். சூடு ஆறிய பிறகு அப்படியே பருகலாம் அல்லது தேன் கலந்து குடிக்கலாம்