27 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
முருங்கைக்கீரையில் ஊட்டச்சத்து நிறைந்தது என்பது நாம் அறிந்த ஒன்று. முருங்கை காய், கீரை, பூ, விதை என அனைத்திலும் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன
குறிப்பாக முருங்கை விதையில் சத்துகள் அதிக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதை தினமும் உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்
முருங்கை விதைகளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து இரவு தூங்கும்முன் குடித்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்
முருங்கை விதைகளில் உள்ள ஜின்க் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
முருங்கை விதைகளில் கால்சியம் அதிக உள்ளதால் எலும்புகளை வலுவாக்கி மூட்டு வலியை குறைக்க உதவுகிறது
முருங்கை விதைகள் உடலில் இருந்து கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது
முருங்கை விதைகளை அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. எதாவது ஒருவேளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்