தினமும் புத்தகம் வாசிப்பதன் நன்மைகள்

22 August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

         புத்தகம்

மொபைல் போனுடன் இருக்கும் இன்றைய காலத்தில் புத்தகம் வாசிப்பது என்பது பலரிடையே குறைந்துள்ளது

         நன்மைகள்

தினமும் புத்தகம் வாசிப்பது மிகவும் நல்லது. இதில் பல நன்மைகள் இருக்கிறது

       கற்கலாம்

புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தினம் தினம் புதிய விஷயங்களை கற்க முடியும். இதன் மூலம் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும்

           கவலை

தினமும் படிப்பது உங்கள் மனதை கவலையில் இருந்து விலக்கி, சிந்தனைகளை திசை திருப்ப உதவி செய்யும்

   எழுதும் திறன்

புத்தகங்கள் வாசிக்கும்போது வார்த்தைகள் நிறைய தெரிய தொடங்கும். இதனால் சரளமாக எழுதுவது, பேசுவது மேம்படும்

     பேசும் திறன்

தினமும் வாசிப்பது மொழி திறனை வளர்க்க உதவும். இதன்மூலம் எந்த ஒரு தயக்கமுமின்றி தைரியமாக பேசலாம்

      1 மணி நேரம்

புத்தகம் மட்டுமில்லாமல் பத்திரிகைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றையும் தினமும் ஒரு மணி நேரம் படிக்கலாம்