தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது ஏன்?

16 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

உடல் பருமன்

பணி சூழல் காரணமாக  மாறிவரும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவைகளால் சிலருக்கு உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது சரிவிகித உணவு என வாழ்க்கை முறை இருந்தாலே ஆரோக்கியமாக இருப்பீர்கள்

உடல் ஆரோக்கியம்

தினமும் உடற்பயிற்சி அல்லது வாரம் ஒருமுறை உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்

சோர்வு

ஒரு நாளில் போதுமான அளவு தூங்கினாலும் சோர்வாக இருந்தால் சிறிதளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்

யோகா

யோகா குறைந்தது ஒருநாளைக்கு 30 நிமிடங்களாவது செய்ய வேண்டும். வாரம் 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்யவும்

சாப்பாடு

அளவோடு சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும். எனவே, உடற்பயிற்சி தினமும் செய்யும்

வைட்டமின் டி

வைட்டமின் டி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனால் தினமும் வாக்கிங், ஜாகிங் செய்வதை பழக்கமாக்கவும்