22 November 2024
Pic credit - Freepik
Author : Mukesh
ஆரோக்கியமாக இருக்கவும், உடல் பருமனை குறைக்கவும் தினமும் 45 நிமிடங்கள் நடக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
இவ்வளவு நேரம் இல்லாதவர்கள் குறைந்தது 10 நிமிடங்கள் ஓடினால் பல நன்மைகளை பெறுவார்கள்.
தினமும் 10 நிமிடங்கள் ஓடுவது எடையை குறைப்பது மட்டுமல்லாமல், மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும்.
உடல் பருமனை குறைக்க நடைப்பயிற்சியை விட ஓடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேநேரத்தில், தொப்பையையும் குறைக்கும்.
தினமும் ஓடுவது உடலில் சந்தோஷ ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால் நீங்கள் உடலளவிலும், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
தூக்கமின்மை உள்ளவர்கள் ஓடுவதால் நல்ல பலனை பெறுவார்கள். இது இரவில் நன்றாக தூங்க உதவி செய்யும்.
ஓடுவதன்மூலம் தசைகள், மூட்டுகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தும்.