03 August 2023
Author : Umabarkavi
Pic credit - Unsplash
இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் செய்கிறார். நீச்சல் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
நீச்சல் செய்யும்போது உடலில் உள்ள அனைத்து தசைகளும் செயல்படும். இதனால் உடல் வலிகள் வராமல் இருக்கும்
நீச்சல் தொடர்ந்து செய்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்
நீச்சல் செய்யும்போது அவ்வப்போது மூச்சுப் பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கும். ஒரு வகையான மூச்சுப்பயிற்சி செய்வதால் நுரையீரலுக்கு நல்லது
நீச்சல் செய்யும்போது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும். தேவையற்ற கொழுப்பை குறைத்து தசைகளை வலுவாக்கும்
நீச்சல் குளத்தில் இருக்கும் க்ளோரின் சருமத்தை டேன் செய்துவிடும். முடி உதிர்வு, கண் எரிச்சலும் ஏற்படும். இதனால் அதற்கேற்ற உபகரணங்களை பயன்படுத்தவும்
மூட்டு வலி, தீவிர உடல்நல பிரச்னைகைள் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் நீச்சல் செய்யாதீர்கள்