21 JULY 2023
Pic credit - tv9
Author Name : Mukesh
தினசரி உணவில் தேங்காய் எண்ணெயை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
முடியின் வேர் பகுதிகளில் இருந்து தேங்காய் எண்ணெயை நுனி வரை தடவி குளித்தால், சில நாட்களில் முடி உதிர்வு பிரச்சனை மறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெயில் இரண்டு துளி பெப்பர்மின்ட் ஆயில் கலந்து கால்கள் மற்றும் கைகளை மசாஜ் செய்தால் தசை வலியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
லாவெண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடல் முழுவதும் மசாஜ் செய்வதால் கை, கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இரவில் படுக்கும் முன் உதடுகளில் தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் உதடு வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
தலைமுடியில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.