13 May 2024
எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்
கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் கல்லீரல், பெருங்குடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவியாக இருக்கும்
வைட்டமின்கள், தாதுக்கள் அதகளவில் உள்ளது. மேலும், குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாரளமாக கீரையை சாப்பிடலாம்
கீரையில் இருக்கு ஆண்டி ஆக்ஸிடன்கள் ஆரோக்கியமான கண் பார்வைக்கு உதவுகிறது. மேலும், கண்புரை போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்
கீரையில் வைட்டமின் கே, கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. இவை இரண்டும் வலுவான எலும்புகளை பெற உதவும் ஊட்டச்சத்துகள் ஆகும்
கீரையில் இருக்கு நார்ச்சத்து, அஜீரண பிரச்னைகளை போக்குவதோடு, சீரான செரிமான செயல்பாட்டுக்கு உதவுகிறது.
கீரையிலுள்ள இரும்புசத்து ரத்த சோகை பிரச்னைகள் எதிர்த்து போராட உதவும். மேலும், அதில் உள்ள இரும்புச்சத்து கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்களுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்தாக உள்ளது.
எனவே, தினமும் முடியவில்லை என்றாலும், வாரத்தில் 4 நாட்கள் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது