தமிழ் சினிமாவின் "சிறந்த காதல் திரைப்படங்கள்"  

13 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

அகத்தியன் இயக்கத்தில் அஜித்குமார், தேவயானி நடித்த காதல் கோட்டை படம் பார்க்காமலே காதல் என்ற புது ட்ரெண்டை உண்டாக்கியது.

காதல் கோட்டை

தமிழ் சினிமாவில் காதலுக்கான அர்த்தம் அழகாக சொன்ன படங்களில் ஒன்று “மௌனராகம்”. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் மோகன், ரேவதி, கார்த்திக் நடித்திருந்தனர். 

மௌன ராகம் 

பள்ளி பருவத்தில் இருந்த சொல்ல முடியாத காதல், மீண்டும் “96” படத்தில் இடம்பெற்ற ரீ-யூனியனில் நினைவுக்கூரப்பட்டது. விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். 

96

விக்ரமன் இயக்கத்தில் விஜய்யின் முதல் பிளாக்பஸ்டர் படம். தான் ஆசைப்பட்டது நடக்கல.. காதலி ஆசைப்பட்டதாவது நடக்கட்டுமே என வித்தியாசமான பார்வையை கொடுத்தது. 

பூவே உனக்காக

சாதியமும், சமூகமும் காதலின் அழகை எத்தகைய கோரத்துக்கு உள்ளாக்கும் என்பதை உண்மை சம்பவத்துடன் வெளிப்படுத்திய படம். பரத், சந்தியாவின் நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்தது.

காதல் 

இன்றைய இளம் தலைமுறைகளின் காதல் அணுகுமுறைகளை அன்றே வெளிப்படுத்திய படம். மாதவன், ஷாலினி எவர்க்ரீன் ஜோடியாக கொண்டாடப்பட்டனர். 

அலைபாயுதே 

வயது மூத்த பெண், மாற்று மதம் என ஒரு வேடிக்கையான காதல் கதையை கவிதையாக சிம்பு, திரிஷா நடிப்பில் கொண்டு சேர்த்தார்  கௌதம் மேனன்

விண்ணைத்தாண்டி வருவாயா