26 September 2024
Pic credit - Freepik
Mohamed Muzammil S
வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை தணிக்கும். சீரகம், மிளகு இரண்டையும் நல்லெண்ணெயில் போட்டு மிதமாக சூடுப்படுத்தி தேய்க்க வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம்.
தினமும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் எடுத்து வந்தால் உடல் சூட்டை தணிக்கிறது. இது அல்சரையும் குணப்படுத்துகிறது.
பக்கெட்டில் சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு அரை பாட்டில் ரோஸ் வாட்டரை ஊற்றி 15 நிமிடங்கள் காலை விட்டால் உடல் சூடு குறையும்
வாழைப்பழம், தர்பூசணி, முலாம் பழம், ஆப்பிள், பப்பாளி, புடலங்காய், பாகற்காய், இளநீர், குளிர்ந்த பால் ஆகியவற்றை சாப்பிடலாம்.
மீன், கோழி, மாடு, உப்பு, புளிப்பு, அதிக காரம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.