கருவுற்ற பெண்கள் விரதம் இருக்கலாமா?

19 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

விரதம் 

கருவுற்ற காலத்தில் பொதுவாக விரதம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். விரதம் இருப்பது குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

நீரிழிவு 

கருவுற்ற காலத்தில் விரதம் இருப்பது தலைவலி, உடல் சோர்வு, தலை சுற்றல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகவும் இருக்கும்

கார்டீஸால்

கருவுற்ற காலத்தில் விரதம் இருப்பது அதிக கார்டீஸால் உற்பத்தியை தூண்டும். இதனால் அதிக மன அழுத்தம் ஏற்படும்

எடை குறைப்பு 

விரதம் இருப்பதால் கருவில் இருக்கும் குழந்தை எடை குறைவாக பிறக்க வாய்ப்புள்ளது.

பழங்கள் 

அப்படி கட்டாயம் விரதம் இருக்க வேண்டும் என்றாலும், அடிக்கடி பழச்சாறு, நட்ஸ் அல்லது பழங்களை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து 

இவற்றை தவிர இளநீர், தேங்காய் பால், தண்ணீர் என நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

மருத்துவ சிகிச்சை 

கருவுற்ற காலத்தில் விரதம் இருக்கும் போது ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனை வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்