இணையத்தில் வைரலாகும் நடிகை வர்ஷா பொல்லம்மாவின் சிறுவயது போட்டோ

27 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கர்நாடகா மாநிலத்தில் 1996-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பிறந்தார் நடிகை வர்ஷா பொல்லம்மா.

பிறப்பு

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ’சதுரன்’ என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை தான் வர்ஷா.

அறிமுகம்

வெற்றிவேல், இவர் யார் என்று தெரிகிறதா, யானும் தீயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் படங்கள்

மலையாள மொழியிலும் நடிக்க துவங்கிய வர்ஷா தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் தற்பொழுது நடித்து வருகிறார்.

தென்னிந்திய மொழிகள்

கடந்த 2019ம் ஆண்டு வெளியான விஜயின் ’பிகில்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிகில்

இறுதியாக தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’அக்கா குருவி’ என்கின்ற திரைப்படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

அக்கா குருவி

திரைப்படங்களில் செம பிஸியாக இருக்கும் வர்ஷா, சோசியல் மீடியாக்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

சோசியல் மீடியா

நடிகை வர்ஷா பொல்லம்மாவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறு வயது புகைப்படம்