படிக்கட்டுகளில் ஏறும் உடற்பயிற்சி ஆரோக்கியமானதா?

10 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

உடல் எடை

உணவுப் பழக்கம், வாழ்வியல் மாற்றங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

உடற்பயிற்சி

அதில் ஒன்று படிக்கட்டுகளில் ஏறும் உடற்பயிற்சி. இது உடல் எடை குறைக்க பெரிதும் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்

ரத்த ஓட்டம்

படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. சிறந்த ரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கிறது

கெட்ட கொழுப்பு

படிக்கட்டுகளில் ஏறி, இறங்கும்போது உங்களின் முட்டிக்கால், நெஞ்சு பகுதியிலுள்ள தசைகள் நன்றாக இயங்கும். கெட்ட கொழுப்பு குறையும்

தசை வளர்ச்சி

உடலின் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு வளர்சிதை மாற்றத்திற்கும் படிக்கட்டுகளில் ஏறுவது நல்லது

நடைபயிற்சி

நடைபயிற்சி எவ்வளவு நல்லதோ அதே அளவு படிக்கட்டுகளில் ஏறி உடற்பயிற்சி செய்வது நல்லது

வயதானவர்கள்

சிலருக்கு படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது செட் ஆகாது. வயதானவர்கள், மூட்டு பிரச்னை இருப்பவர்களுக்கு இது உகந்தது அல்ல