02  June 2024

கழுத்து வலி ஏற்பட இதுதான் முக்கிய காரணம்!

நவீன காலத்தில் இளைஞர்கள் பலரும் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் உழைப்பு தேவைப்படாத வேலையை செய்வதால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் உட்கார்ந்த இடத்திலேயே 8 முதல் 12 மணி நேரம் வேலை பார்க்கிறோம். இது தான் கழுத்து வலிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது

எனவே, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவராக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்க வேண்டும்

கணினி, மடிக்கணினிகளை பயன்படுத்தும்போது சரியான இருக்கையில் அமருவது அவசியம். உங்களது முதுகுதண்டு வளைவுக்கு ஏற்றவாறு இருக்கும் இருக்கையில் அமருங்கள்

போனை பயன்படுத்தும்போது நம் கழுத்து எப்போதும் கீழே வளைந்து இருக்கும். இந்த பழக்கம் இருந்தால் நாளைடையில் மோசனை கழுத்து வலியை ஏற்படுத்தும்

இதனால், போன் பயன்படுத்தும்போது கழுத்தை ஒரே பொசிஷனில் வைக்க வேண்டும். அதேபோல, மொபைலை நீண்ட நேரம் பார்ப்பதை தவிருங்கள்

கழுத்து வலியை கட்டுப்படுத்த அடிக்கடி வார்ம் அப் செய்யுங்கள். மேலும், சுடு தண்ணீரில் ஒத்தடமும் கொடுக்கலாம். மேலும், தீராத கழுத்து வலியாக இருந்தால் மருத்துவரை அணுகலாம்

NEXT: உடல் எடை குறைக்க கிரீன் டீ குடிக்கலாமா?