26 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
தொடர்ச்சியாக வரும் இருமல், தும்மலை போக்க என்னெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்
புதினா டீ போட்டு குடித்தால் இருமல், தும்மல் வராமல் கட்டுப்படுத்தலாம். புதினாவில் இயற்கையாகவே இருமல், மூக்கடைப்பை போக்கும் பண்புகள் உள்ளன
எசென்ஷியல் ஆயிலை வெண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து நீராவி பிடிப்பதால் இருமல் குணமாகலாம்
உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் தொண்டை வறட்சி, இருமல் ஆகியவை சரியாகலாம். உப்பு கலந்த நீர் தொண்டை சளியை நீக்க உதவும்
இஞ்சி டீ தொண்டை சளியையும், இருமலையும் போக்க உதவும். இஞ்சியை கொதிக்க வைத்து அதில் தேன், புதினா இலையை சேர்த்து குடிக்கலாம்
சூடான பாலில் மஞ்சள் பொடியை கலந்து குடித்தால் இருமல், சளி குணமடையலாம்
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்