07 NOV 2024

உலகில் அதிக யுனெஸ்கோ  பாரம்பரிய சின்னங்களைக் கொண்ட நாடுகள்...

Author Name : Mohamed Muzammil S

Pic credit -  Pinterest

இத்தாலி

இத்தாலியில் மொத்தம் 60 உலக பாரம்பரிய சின்னங்கள் இருக்கிறது.‌ தற்பொழுது புதிதாக 800 கிலோமீட்டர் நீளமுள்ள வியா அப்பியா சேர்க்கப்பட்டுள்ளது.

சீனா

59 பாரம்பரிய சின்னங்களைக் கொண்டு சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் இரண்டு இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டது.

ஜெர்மனி

ஜெர்மனியில் மொத்தம் 54 உலக பாரம்பரிய சின்னங்கள் இருக்கிறது. ஸ்வெரின் கோட்டை கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது.

பிரான்ஸ்

அண்மையில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மார்க்கெசசுத்‌ தீவுகளை சேர்த்து பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 53 உலக பாரம்பரியம் சின்னங்கள் உள்ளது.

ஸ்பெயின்

50 உலக பாரம்பரிய சின்னங்களைக் கொண்டு ஸ்பெயின் ஐந்தாமிடத்தில் உள்ளது.

இந்தியா

இந்தியாவில் 43 இடங்கள் உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இறுதியாக அசாமில் உள்ள மெய்தாம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ

35 உலக பாரம்பரிய சின்னங்களைக் கொண்டு மெக்சிகோ ஏழாம் இடத்தில் உள்ளது.