2024ல் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!

14 December 2024

Pic credit - Getty

Author : Mukesh 

             கவுல்

இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய சித்தார்த் கவுல் சமீபத்தில் ஓய்வை அறிவித்தார். ஓய்வுக்கு பிறகு தற்போது எஸ்பிஐ வங்கியில் பணிபுரிகிறார்.

      சவுரவ் திவாரி

ஐபிஎல்லில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளாக அதிரடியாக பேட்டிங் செய்த சவுரவ் திவாரி, இந்த ஆண்டு தனது கேரியரை முடித்து கொள்வதாக அறிவித்தார்.

   வருண் ஆரோன்

இந்திய அணியில் ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த வருண் ஆரோன், இந்த ஆண்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

        கேதர் ஜாதவ்

39 வயதான கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் கடந்த ஜூன் 3ம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

            சஹா

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

        ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக கலக்கிய ஷிகர் தவானும், இந்த ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

          ஓய்வு

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திரா ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

       இந்திய அணி

தற்போது, இவர்கள் மூவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர்.