தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!

12 September 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

            இதயம்

உடற்பயிற்சி இதயம் மற்றும் இருதய அமைப்பை பலப்படுத்துகிறது. இது இதயத் துடிப்பை சீராக்கி, சுவாசத்தை எளிதாக்குகிறது. 

             மூளை

உடற்பயிற்சி மூளை செல்களின் இணைப்புகளை பலப்படுத்துகிறது. இது செரோடோனின் ஹார்மோனின் அளவை அதிகரிக்க செய்து, கவனத்தையும் தெளிவையும் தருகிறது.

    மன அழுத்தம்

உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் ஓய்வை அளிக்கிறது.

           தூக்கம்

உடற்பயிற்சி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது தூக்கக் கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைக்கிறது.

          தசைகள்

உடற்பயிற்சி தசைகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தி, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

              சருமம்

உடற்பயிற்சியின் மூலம் சருமமும் நன்மைகளைப் பெறுகிறது. வெளியேறும் வியர்வையால், உடல் மீண்டும் புத்துணர்வை பெறுகிறது.