பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு ஹேப்பி பர்த்டே!

17 August 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் திரைத்துறைக்கு வந்து தற்போது தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர் ஆக உருவெடுத்து இருப்பவர் இயக்குநர் ஷங்கர்.

நடிகராக ஆசை

1986ல் நடந்த பூவும் புயலும் படத்தில் சிறு வேடத்தில் தோன்றினார். மேலும் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். 

சிறு வேடம்

நடிப்புக்கான முயற்சி பெரிய அளவில் கைக்கொடுக்காததால் இயக்குநராக முயற்சித்த ஷங்கர் அதில் வெற்றியும் கண்டார்.

இயக்குநர்

இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் ஷங்கர்.

உதவி இயக்குநர்

1993-ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர்.

அறிமுகம்

முதல் படமான ஜென்டில்மேன் பிரம்மாண்டமான தயாரிப்பு என்பதால், தொடர்ச்சியாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களையே அவர் இயக்கினார். 

பிரமாண்ட இயக்குநர்

காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 ஆகிய ஹிட் படங்களை இயக்கிய ஷங்கர் தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கியிருந்தார். 

படங்கள்

இயக்குநராக ஹிட் படங்களை தந்த ஷங்கர், தயாரிப்பாளராகவும் தரமான படங்களை உருவாக்கியுள்ளார்.

தயாரிப்பாளர்

தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில், காதல் என இந்த லிஸ்டில் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஹிட் படங்கள்

நேபாள நாட்டில் கடந்த 1970-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பிறந்தவரான மனிஷா கொய்ராலா. 

பிறந்த நாள்