17 OCT 2024

பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க எளிய வழிமுறை...

Author Name : Mohamed Muzammil S

Pic Credit - Pinterest

தண்ணீர்

பட்டாசு வெடிக்கும் போது அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் வாளிகள் அல்லது சாக்குகளில் மணல் வைத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. 

உடை

பட்டாசு வெடிக்கும் போது காட்டன் உடைகளை பயன்படுத்துங்கள். பாலிஸ்டர் உடை எளிதில் தீப்பற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. வெடித்த பட்டாசுகளிலிருந்து காயம் ஏற்படாமல் இருப்பதற்கு செருப்பு கட்டாயம் அணிய வேண்டும்.

கையுறை, கண்ணாடி

குழந்தைகள் வெடி வெடிக்கும் பொழுது கையுறை, கண்ணாடி அணியுங்கள். மூச்சுத் திணறல் உள்ளவர்கள் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

தீக்காயம்

தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க வேண்டும். காயம் பட்ட இடத்தில் மண், மஞ்சள், காபித்தூள், பேனா மை, சுண்ணாம்பு போன்றவற்றை கண்டிப்பாக வைக்கக் கூடாது. 

அவசர எண்கள்

அவசர ஊர்தி, தீயணைப்புத்துறை எண்கள் முன்னதாகவே  பெற்று வைத்துக் கொள்ளுங்கள். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

தொந்தரவு

கவயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தால் அவர்களுக்கு தொந்தரவு தரும்படி சத்தத்தோடு பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.