காபியுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத பொருட்கள்

08 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

காபி

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு தினமும் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. 

அத்தியாவசியம்

சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் அந்த நாளே ஓடாது. இந்த அளவிற்கு காபி சிலரின் வாழ்வில் அத்தியாவசியமாக உள்ளது. 

சிக்கன்

சிக்கன் உள்ளிட்ட இறைச்சிகளை சாப்பிடும்போது காபி குடித்தால் உடலில் ஜிங்க் சத்து குறைய வாய்ப்புள்ளது. 

பருப்பு

பருப்பு வகைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அவற்றை காபியுடன் உட்கொள்ளும்போது இரும்புச் சத்து உறிஞ்சப்பட வாய்ப்புகள் குறைவு. 

பீட்ரூட்

பீட்ரூட்டில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளதால் காபியுடன் சேர்த்து சாப்பிடும்போது சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.

பால் பொருட்கள்

பால் பொருட்களுடன் காபி குடிக்கும்போது கால்சியம் சத்து உறிஞ்சப்படாது. 

கொழுப்பு

கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் காபி குடிக்கும்போது இதய சம்மந்தமான பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க