14 DEC 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
பாதாம் பருப்பில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, பாதாமில் மோனோசேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.
இந்த மோனோசேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நன்மை பயக்கும்.
பாதாமில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் பி3 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
பாதாமில் காப்பர், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
பாதாம் அதிக நார்சத்து கொண்டது என்பதால் அது செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக ஒரு நாளைக்கு 20 முதல் 30 பாதாம் வரை சாப்பிடலாம் என கூறப்படுகிறது.
குழந்தைகள் ஒரு நாளைக்கு 5 முதல் 10 பாதாம் வரை சாப்பிடலாம்.
இதுவே பெரியவர்கள் என்றால் ஒரு நாளை 20 முதல் 25 பாதாம் வரை சாப்பிடலாம் என கூறப்படுகிறது.
அனால், ஒரு சில உடல்நல பிரச்னைகள் இருப்பவர்களுக்கு பாதாம் அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே, அதை மருத்துவரிடம் பரிசோதனை செய்து எடுத்துக்கொள்ளலாம்.