வெறும் பப்பாளி இலையில் இவ்வளவு நன்மைகளா?

04 July 2024

Pic Credit: unsplash

டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய அறிகுறிகளை குணப்படுத்த பப்பாளி சாறு பயன்படுத்தப்படுகிறது. டெங்கு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பப்பாளி இலைச்சாறு இரத்தத்தில் பிளேட்லெட் அளவை அதிகரிக்க உதவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெங்கு

பப்பாளி இலைச் சாறு பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் காய்ச்சலுக்கு மருந்தாக அயுர்வேத மருத்துவத்தில் பப்பாளி இலை, சாறு முக்கிய பங்கு வகித்தது.

பப்பாளி இலை

பப்பாளி இலைச்சாறு நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டுமன்றி இது ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது. மேலும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதையும் ஆய்வுகள் உறுதி படுத்தியுள்ளது.

நீரிழிவு நோய்

இரைப்பை, உடல் பருமன் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்னைகளை குறைக்க பப்பாளி இலை தேநீர் பயன்படுகிறது. தசை வலி, மூட்டு வலி உள்ளிட்ட வெளிப்புற வலிகளுக்கு பப்பாளி இலையின் சாறு பயன்படுத்தப்படுகிறது.

செரிமான பிரச்னை

பப்பாளி இலையின் சாற்றை உச்சந்தலையில் தேய்த்தால் முடி ஆரோக்கியமாக வளரும் என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி தலையில் உள்ள பொடுகு பிரச்னையையும் இது தீர்க்க உதவுகிறது. 

முடி வளர்ச்சி

பப்பாளி இலையில் புரதத்தை கரைக்கும் என்சைம் உள்ளது. பப்பாளி சாற்றை தோலில் தடவினால் அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது.

சருமப் பாதுகாப்பு

இவ்வாறு பல நன்மைகளை கொண்ட இந்த பப்பாளி இலையை ஜூஸ் அல்லது தேநீர் வடிவில் தினமும் போதுமான அளவு எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தினமும் பருகலாம் 

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்