15 DEC 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
கோபம், அழுகை, சிரிப்பு உள்ளிட்ட அனைத்தும் மனிதர்களுக்கு இயல்பான குணங்கள் ஆகும்.
இந்த நிலையில், ஏதேனும் மன கவலையை ஏற்படுத்தும் சம்பவங்கள் அழுகை வருவது இயல்பானது.
இதேபோல, ஏதேனும் எரிச்சலடைய செய்யும் செயல்கள் மற்றும் தவறுகள் கோபத்தை ஏற்படுத்தும்.
ஆனால், ஒரு சிலர் அதிக கோபம் அல்லது ஆத்திரம் வரும்போது அழ தொடங்கிவிடுவர். இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது.
ஏதேனும் கோபமடைய செய்யும் செயல்கள், அல்லது குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடும் போது தன் தரப்பு வாதத்தை முன் வைக்கவில்லை என்றால் அழுகை வரும்.
எதிரில் இருப்பவர்களை மறுத்து பேச முடியாதவர்களை பாசிட் பர்சனாலிட்டி என்று அழைக்கின்றனர்.
இத்தகைய பண்பை கொண்டவர்கள் மற்றவர்களை காயப்படுத்த கூடாது என்ற நல்ல எண்ணத்தை கொண்டிருப்பர்.
இவர்கள் நட்பையும், தங்களை சுற்றி இருக்கும் உறவுகளையும் இழக்க மனம் இல்லாதவர்கள்.
ஒருவேளை நாம் எதிர் விவாதம் செய்தால் நம் உறவுகள் நம்மை விட்டு போய்விடும் என்ற எண்ணத்தில் அவர்கள் விவாதம் செய்யாமல் அழ செய்கின்றனர் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.