22 May 2024

உடல் எடை குறைப்புக்கு கிரீன் டீ குடிக்கலாமா?

உடல் பருமன் என்பது இப்போது மிகப் பெரிய பிரச்னையாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இப்போது உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்

உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க பல யுக்திகளை கடைப்பிடிக்கிறார்கள். அதில் ஒன்று க்ரீன் டீ

தினசரி 2-3 கப் சூடான் கிரீன் டி குடிப்பது உடலுக்கு நன்மை தரும். இது உடலில் மெட்டாபாலிசத்தை சிறப்பாக செயல்பட உதவுவதன் மூலம் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்

கிரீன் டீ உடல் எடை குறைப்பு செயல்முறைய தூண்டும் என்ற போதும் அது குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை.

இதைவிட உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் நம்மால் வேகமாக எடையைக் குறைக்க முடியும். இத்துடன் உணவில் காய்கறிகளை அதிகமாக எடுத்து கொள்ளலாம்

மேலும், விளம்பரங்களை பார்த்து அடிக்கடி க்ரீன் டீ குடிப்பதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

இது பொதுவான தகவல் மட்டுமே. இதை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடல் பருமன் தொடர்பாக மருத்துவரை அணுகலாம்

NEXT: ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?