வேலை செய்யும் இடத்தில் செய்யக்கூடாத தவறுகள்!

16 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ஆரோக்கியமான பணிச்சூழலும், ஒத்துழைப்பும் அவசியம் என்பதால் யார் சொல்வதையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது

நம்பக்கூடாது

எக்காரணம் கொண்டும் யாரிடமும் தனிப்பட்ட விஷயங்கள், விவரங்கள் பற்றி பேசவேக் கூடாது. இது உங்களுக்கே எதிராக முடியும்

பகிரக்கூடாது

அலுவலகத்தில் சக ஊழியர்களை பற்றி வதந்தி பேசுவது நம்பிக்கையை குறைக்கும். ஒருபோதும் அதை செய்யாதீர்கள்

பேசக்கூடாது

அலுவலகத்தில் பலவிதமான நபர்கள் இருப்பார்கள். அதனால் யாரையும் எந்த விஷயத்திலும் குறை சொல்லாமல் தவறை சுட்டிக்காட்ட முயலுங்கள்

சொல்லக்கூடாது

வேலையில் உற்சாகம், ஊக்கம் எல்லாம் தேவை தான். அதற்காக அதிகமான நேரம் உழைத்து ஆரோக்கியத்தை கெடுக்க வேண்டாம்

செய்யக்கூடாது

ஆரோக்கியமான போட்டி என்பது அலுவலகத்தில் இருக்க வேண்டும். அதனை விடுத்து யாரையும் குறைவாக நினைக்கக்கூடாது

நினைக்கக்கூடாது

முரண்பாடுகளை பேசி சரி செய்ய வேண்டும். அதனை பகையாக வளர்த்து மோதலில் ஈடுபடுவது போல நடக்கக்கூடாது

நடக்கக்கூடாது