20 May 2024
Photos : pexels
நேரங்களிலும் மாற்றம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர். மேலும் இதனால் நாம் நொடிப்பொழுதை தவறவிடாலாம் எனவும். 2029 ஆம் ஆண்டில் "நெகடிவ் லீப் செகன்ட்" ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்ந்து கொண்டிருக்கிறது. எனவே பனிப்பாறைகள் அதிகளவில் உருகத் தொடங்கியிருக்கிறது. இது பூமியின் மேலோட்டின் எடையை குறைக்கிறது. இந்த எடை குறைவதால் பூமி தன் வேகத்தை அதிகரித்துள்ளது.
காற்றின் திசை மாறுபாடு அல்லது வளிமண்டல சுழற்சியானது பூமியின் வேகத்தை மாற்றக்கூடியது. இது பெரும்பாலும் பருவநிலை மாற்றத்தால் நிகழ்கிறது.
ஒரு பெரிய நிலநடுக்கமானது பூமியில் மேலோட்டினை நகர்த்தும் தன்மை கொண்டது. இது எடையை கோளிற்குள்ளேயே மறுபகிர்வு செய்கிறது. எனவே பூமியின் வேகத்தை இது பாதிக்கிறது.
உப்பின் தன்மை, வெப்பநிலை மற்றும் காற்று ஆகியவற்றால் கடலின் நீரோட்டங்கள் மாறுபடுகிறது. இது பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பூமி, சூரியன் மற்றும் நிலா ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பானது, வான்வெளியின் சுற்றுப்பாதைக்கும், சுழலும் பூமிக்கும் இடையே ஆற்றல் பரிமாற்றத்தை நிகழ்த்துகிறது. இது பூமியின் வேகத்தை பாதிக்கும்.