சருமத்திற்கு நன்மை பயக்கும் கொலாஜன் நிறைந்த 5 உணவுகள்

05 July 2024

Pic Credit: unsplash

கொலாஜன் தலைமுடி, சருமம், நகம் ஆகியவற்றிற்கு அத்தியாவசியமான ஒரு புரதம் ஆகும். கொலாஜன் அதிகம் நிறைந்த உணவு பொருட்களை உட்கொண்டால் உங்கள் முகம் பொளிவாகவும், இளமையாகவும் இருக்கும்.

கொலாஜன்

நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய கொலாஜன் நிறைந்த 5 உணவு வகைகள்

உணவுகள்

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நம் அன்றாட உணவில் இவற்றை எடுத்துக்கொள்ளும்போது சருமம் பொலிவுடன் இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள் 

சிக்கனில் அதிகப்படியான கொலாஜன் உள்ளது. சிக்கனின் தோல் பகுதியில் அதிக கொலாஜன் நிறைந்துள்ளது. அதுமட்டுமன்றி கொலாஜனை உருவாக்க கூடிய ப்ரோலைன் மற்றும் அமினோ அசிடும் சிக்கனில் நிறைந்துள்ளது.

சிக்கன் 

கீரைகளில் ஆன்டி - ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் கொலாஜன் உருவாக்கத்தை தூண்டுகிறது. அதுமட்டுமன்றி கீரை வகைகளில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

கீரை வகைகள் 

சால்மன் போன்ற பெரிய வகை மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இது உடலில் கொலாஜன் உருவாக உதவுகிறது. அதுமட்டுமன்றி இதில் வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

மீன்

உடலில் கொலாஜனை உருவாக்க பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாட உணவில் பூண்டு எடுட்துக்கொள்வதன் மூலம் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

பூண்டு 

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்